கீதையில் கண்ணன் ஆத்துமஞானத்தையும் தத்துவஞானத்தையும் சரி சமமாக குரிப்பிட்டிருக்கிரார். ஆத்துமஞானத்தை பற்றி பல புத்தகங்கள் உள்ளன. ஆனால் தத்துவஞானம் என்றால் என்ன? தத்துவம் என்றது எதை குறிக்கிறது?

adhyātma-jñāna-nityatvaṁ tattva-jñānārtha-darśhanametaj jñānam iti proktam ajñānaṁ yad ato ’nyathā – Ch-13, Ver 11

अध्यात्मज्ञाननित्यत्वं तत्वज्ञानार्थदर्शनम् |एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा || 

சித்தர் அகத்தியர் தத்துவம்-300 என்ற நூலில் தத்துவங்களை பற்றி விவரமாகவும் விசேடமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பண்டய காலத்தில் இருந்து பாரததில் பல்வேரு சமயங்கள் உள்ளன. ததுவங்கள் எல்லா சமயத்தினருக்கும் பொதுவு. ஒவ்வொரு சமயத்தினரும் தம் கொள்கைகளை தத்துவங்கள் வழியாகவே நிரூபித்து இருக்கிரார்கள். ஆகையால் எந்த ஒரு சமயத்தை பற்றியும் முழுமையாக அறிவதற்க்கு தத்துவஞானம் அவசியம். தத்துவஞான ஆராய்ச்சிக்காக தனி பகுதிகள் நலந்தா மற்றும் சில பண்டைய பல்கலைகழங்களில் இருந்தன.

அகத்தியர் சித்தர்களின் கொள்கைகளை  தத்துவம்-300 என்ற நூலில் குறித்து காட்டியிருக்கிரார்,  பிற சமயங்களை பற்றியும் அதில் சில குறிப்புகள் உள்ளன. அந்த நூல் தத்துவஞானத்திற்க்கு ஒரு எடுத்துகாட்டு. இவ்வாறான விவரங்களை அறிவிக்கும் வட மொழி ஏட்டுசுவடிகள் காலப்போக்கில் அழிந்திருக்கலாம். தமிழ் சுவடிகளை நம்முன்னோர்கள் ஆர்வத்துடன் நமக்காக காப்பாற்றி இருக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial